இரவில் உன் மடியில் சாய்ந்து கொண்டு
விடியலுக்காக காத்திருப்பது ஒரு சுகம் என்றால்
அந்த இரவினில் உன் கை பிடித்து தொலைதூர
நடைபயணம் செய்வது மற்றொரு சுகம்
இரவு வானில் நட்சத்திரம் மின்னுவதை போல
நம் கனவுகளும் மின்னுமடி ஒரு நாள்
இமைகள் தூங்கிய போதும் என் இதயம் கேட்கும் மெல்லிசை
அவளின் மெல்லிய புன்னகை
விடியல் நமக்காக சிகப்புகம்பளம் விரித்து காத்திருக்கும்
ஆனால் நமக்கு போதுமடி இந்த அமைதியான இரவு
..........நான் காத்திருப்பேன் என்றும் உனக்காக என் இனியவளே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக