செவ்வாய், 3 ஜூன், 2014

கிராமத்து கண்மணியே


கூற புடவை கட்டி
குங்குமம் நெற்றியில் இட்டு
வயக்காட்டின் நடுவே
வளைந்து நெளிந்து போற பெண்ணே
மாமன் இங்கு இருக்கேன்
என்ன நீயும் பார்த்துட்டு போ

உன் முகம் நான் பார்க்கையிலே
உள் மனசு கரஞ்சிருச்சி
என் பலமும் கூடிறுச்சி
இனி நான் என்னோட வேலைய
செவ்வனே செஞ்சி முடிப்பேன்
மாமன் பசியற எதாவது செஞ்சி வா புள்ள

மதியம் வேளை வந்தது
பசியும் பறந்து வந்தது
கண்கள் உன்ன தேடுது
எங்க புள்ள நீ  இருக்க
உன்னோட வருகைக்காக நான்
தனந்தனியே காத்து நிக்கேன்

தொலைவினில் உன் குரல் கேட்கையில
நானும் பசி மறந்தேன் புள்ள
வரப்பினில் நீ நடக்கையில்
உந்தன் கால் கொலுசு
நித்தம் என்னை சுண்டி இழுக்குது

என்னை உன் அருகே அமர்த்தி
கொண்டு வந்த பழைய சோற்றை
உன் கையாலே ஊட்டிவிட
அதை நான் அமிர்தமாய் எண்ணி
எந்தன் பசி போக்கினேன்

மாலை பொழுது வந்தது
மனசு உன்ன தேடுது
கால்கள் உன்னை நோக்கி
வெரசாக நடந்து சென்றது
வீடு வந்து சேர்ந்ததும்
உந்தன் முகம் பார்த்தேனடி
எந்தன் களைப்பு எல்லாம்
பஞ்சாகப் பறந்ததடி

மனம் மயக்கும் இரவு வந்தது
என் களைப்பை நீ போக்க
என்னை உன் மடியில் கடத்தி
என் தாயை போல தாலாட்டு பாடி
என்னை நீயும் அசதியாய் உறங்க செய்தாய்
எந்தன் அன்பு கண்மணியே !!!
எந்தன் அன்பு கண்மணியே !!!
எந்தன் அன்பு கண்மணியே !!!

செவ்வாய், 27 மே, 2014

வைகறைப் பெண்ணே


வைகை கரை ஓரத்திலே
     பெண்ணே நீயும் வரும் நேரத்திலே
உனக்காக காத்திருப்பேன்
      உச்சி வானம் பார்த்து நானும்

நீரோடை பக்கத்திலே
       நீயும் வந்து நிக்கையிலே
மாமன் நானும் மயங்கியே
      மடி சாய்ந்து உறங்கினேன்

பொழுதும் சாயும் நேரம் வந்தாச்சி
       துணையை பிரியும் நேரமிது
தனியாக போக நீயும் கலங்கி நின்ன
       துணையாக வாறேன் நானும் சொன்னேன்

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

ஒத்தையில நிக்கிறேன் என் தங்கமே


ஒத்தையிலே நிக்கிறனே பாவியடி நான்
என்ன விட்டு போனாயடி எந்த காரணமும் இல்லாம
போதுமடி இந்த வலி, உணர்ந்தேன் என் தங்கமடி

கொடுத்த வலி சுகம்னு நீ நெனச்ச
வாங்கிய வலி வரம்னு நான் நெனச்சேன்

போதுமடி இந்த வாழ்க்கை
வாழ தகுதி இல்லாத எனக்கு எதுக்கு உன் மேல ஆசை

இன்று வர என் பித்தம் தெளியவில்ல
அது ஏனோ புள்ள ஒன்னும் புரியவில்ல

யாரா சொல்லி என்ன பண்ண
உன்ன நம்பி நான் தனியா நின்னேன்

உனக்காக என் காதலையும் விட்டு விட்டேன்
இனி எதுக்கு இந்த வாழ்க்கைன்னு நெனச்சுபுட்டேன் ... :'(

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

மறந்தேன் எல்லாம் உன்னாலே


நம் காதல் புறாவிற்கு காய்ச்சல் வந்தது 
   அது ஏனோ எனக்கு தெரியவில்லை 
நித்திரையில் நிலா வர மறுத்தது 
   அது ஏனோ எனக்கு தெரியவில்லை
மேகங்கள் கூடியாச்சி ஆனால் மழை வர 
   மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
பூக்கள் மலர்ந்து இருகின்றது ஆனால் வண்டுகள் வர 
   மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
உன் அன்பிற்காக ஏங்கி நிற்கிறேன் தனியே ஆனால் நீ வர 
   மறுப்பது ஏனோ எனக்கு தெரியவில்லை
நீ எனக்கு இல்லை என்று தெரிந்த பிறகும் அழ மறந்தேன்
   அது ஏனோ எனக்கு தெரியவில்லை :'(   :'(   :'(  ...
 

சனி, 19 ஏப்ரல், 2014

என் உயிரே எந்தன் அன்பே


உன் கூந்தலில் என் மனதை கரைத்தாயடி
உன் விழியன் ஓரத்தில் உயிர் சொக்கி போனேனடி
உன் கன்னக்குழியில் என்னை நான் இழந்தேனடி
உன் பார்வையில் நான் பைத்தியம் ஆனேனடி
உன் சிரிப்பினில் என்னை சிக்கவைத்து சிதைத்தாயடி
உன் கண்ணீரில் என் உள்ளம் நனைத்தாயடி
உன் தொண்டைகுழியில் நான் உயிர் சிக்கி தவித்தேனடி
உன் தோளினில் என் கவலைகள் மறந்தேனடி
உன் இடையினில் என் இதய துடிப்பை நிறுத்தினாயடி
உன் மடியினில் நான் மயங்கி போனேனடி
உன் கைகள் கோர்த்து இந்த உலகத்தை மறந்தேனடி
உன் பாதங்களில் என் பாதை காட்டிச்சென்றாயடி
உன் கனவினில் நான் நிஜமாய் வாழ்ந்தேனடி
என் உயிரே!  என் அன்பே! என் அன்பே!!! ...

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சாதியம்


சாதியத்தை நான் கண்ட இடம் காதல்
இதை அவள் காணவில்லை அவள் சுற்றம் பார்த்தது

காதலிக்க தகுதிகள் கிடையாது என்று யார் சொன்னது
தகுதிகள் உண்டு அவை மறைமுகமாக மறைக்கபடுகிறது
அதன் முதல் தகுதி சாதியம்
பாவம் அந்த வெகுளி பெண்ணிற்கு  தெரியவில்லை
காதலில் கூட சாதீயம் உண்டு என்று

பெண்ணே நீயும் சாதியம் பார்துவிடதே
அவன் சாதிப்பான என்று மட்டும் பார்

சாதியத்தை நான் என் அடையாளமாக கூட
பார்க்க விரும்பவில்லை காரணம்
சாதியமும், சாமியும் வீணர்களின்
பொழுதுபோக்காக பார்கிறேன்

நான் சாதியனாக வாழ விரும்பினால்
என்மேல் நானே எழுப்பும் கேள்விகள்

நான் உண்ணும் உணவை விதைத்தவன் என் சாதியன் அல்லவே
நான் அணியும் ஆடையை  நெய்தது என் சாதியன் அல்லவே 
நான் உறங்கும் உறைவிடம் கட்டியது என் சாதியன் அல்லவே
எனக்கு பாடம் கற்று கொடுத்த ஆசான் என் சாதியன் அல்லவே
என் அம்மாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவச்சி என் சாதியன் அல்லவே
நான் வணங்கும் கடவுளின் சிலை வடித்தவன் என் சாதியன் அல்லவே
நான் பணிபுரியும் இடத்தில் அனைவரும் என் சாதியர்கள் அல்லவே
நான் தோல்வியடையும்போது எனக்கு தோள் கொடுத்த 
தோழனும் என் உயிர் தோழியும் என் சாதியன் அல்லவே
பின் எங்கிருந்து வந்ததடா இந்த  சாதீயம்

ஏதோ ஒரு குழந்தை அடிபட்டவுடன் பதறும்
தாயின் உள்ளத்தில் இல்லையாட இந்த சாதியம்

கண் தெரியாத நபருக்கு உதவி செய்யும்
குழந்தையிடம் இல்லையாட இந்த சாதியம்

அவசர காலத்தில் உதவிடும்
நண்பனிடம் இல்லையாட இந்த சாதியம்

தமிழன் மட்டுமே இன்று சாதியத்தை வைத்து தரிகெட்டு போகிறான்
சாதியத்திற்கும் அப்பாற்பட்ட சில விஷயங்கள் உள்ளதடா
மானிடா அது தான் "அன்பு"
இதை நீ எப்போது உணர்ந்துகொள்ள போகிறாய் 





வியாழன், 17 ஏப்ரல், 2014

காதல் அனுபவம்

அன்று என்னை பாவா என அழைத்தவள்
இன்று என்னை பாவம் செய்த மனிதனாக பார்க்கிறாள்

காரணம் அவள் மனதை கெடுத்து உள்ளே நுழைந்ததற்காக
அவள் வேணாம் என்று சொல்லும் போதே
அவள் போக்கில் விட்டிருக்க வேண்டும்

ஆனால் இன்றோ அவளை குற்ற உணர்சிக்கு ஆளாக்கி
இன்னொருவனுடன்  சேர்த்து வைக்க முயற்சிகின்றேன்

அவள்  மனம் மாறவில்லை என்பதை நன்கு அறிவேன்
எனக்காகதான் அவள் தன்  வாழ்க்கையை பணயம் வைக்கிறாள்

அவள் நினைக்கிறாள் அவள் மேல் வெறுப்பை உண்டாக்கினாள்
நான் பிரிந்துவிடுவேன் என்று
பாவம் அவளுக்கு தெரியவில்லை என் மனம் அவளை
வெறுக்காது என்று

என் காதல் நான் வாழும் வரை அல்ல என் இனியவளே
நான்  உன் மனதில் வாழும் வரை அது என்றும் அழியாது

இன்று நான் நம் கனவுகளோடு வாழ முயற்சிக்கிறேன்
நாளை நீ உன் கணவனோடு வாழ முயற்சி செய்ய போகிறாய்

வாழ்த்துக்கள் என்னவளே நீ இதிலாவது வெற்றி பெற வேண்டும்...

சித்திரை பெண்ணே


எந்தன் சித்திரை பெண்ணே, என்னை
நித்திரையில் மட்டும் வாழவைத்தாய்
நித்தம் உன்னை நினைத்து
நினைப்புடனே வாழ்ந்து வந்தேன்

தினமும் பூத்து குலுங்கும் நம் காதல்
மனம் என்னும் தோட்டத்திலே
யார் கண் பட்டதோ தெரியவில்லை
அக்னி வெயில் வந்து எரித்ததே

உன்னை மட்டும் ஒரு பறவை
நீர் ஊற்றி வளர்த்ததே
உந்தன் வரவுகாக தனந்தனியே காத்திருந்து
நான் மட்டும் வெயிலில் கருகி
எந்தன் உயிர் நீத்தேனடி

புதன், 16 ஏப்ரல், 2014

என் அன்பே


உன் பார்வையிலே என்னை வீழ்த்தினாய் பெண்ணே
உன் நெஞ்சு குழியில் என்னை சிறயடைய்தாய் கண்ணே
வீழ்ந்த என்னை அப்படியே விட்டு விட்டாய்
என்னை யாரடி பெண்ணே சிறை மீட்பது
மீட்கும் எண்ணம் உனக்கும் இல்லை
மீளும் எண்ணம் எனக்கும் இல்லை
உணர்ந்தேன் பிரிவின் வலியை
புரிந்தேன் சுற்றத்தின் சதியை
எப்பொழுது என் அன்பை புரிவாய் கண்ணே
புரியும் பொழுது வராதே என் கண்ணின் முன்னே
பின்பு என்னை விட்டு செல்ல தயங்குவாய்
கண்மணியே உன்னை நான் என்றும் மறவேன்
என் கண்ணின் மணியாய் என்றும் உன்னை காப்பேன்

உந்தன் காலடி


இன்று நீ என் இல்லம் வந்து
நான்கு வருடம் ஆகிறது பெண்ணே
என்ன புண்ணியம் செய்தேனோ உந்தன்
காலடி பட்ட இடத்தில் நான் தினம்
தினம் உன் நினைவுகளோடு வாழ்கிறேன் பெண்ணே
நீ இன்று என்னோடு இல்லை என்றாலும்
உன் நினைவுகள் என்றும் என்னை விட்டு அழியாது கண்ணே
தங்கமே பயண களைப்பில்  உன் கால்களை
பிடித்து விட்ட நாட்கள் இனி எப்பொழுது வரும்
அனைத்து இனிய தருணமும் என்
கண்ணின் முன்னே வந்து செல்கிறது பெண்ணே :'(



வியாழன், 10 ஏப்ரல், 2014

விதியின் சதி


நீ வரைந்த ஓவியம் எந்தன் பெயரடி
   உன் கை பட்டதால் அடைந்தேன் பிறவி பலனையடி
உன்னை விட்டு கொடுக்க மனமில்லயடி
    உயிர் என்னை விட்டுவிட துடிக்குதடி
உந்தன் முத்தத்தால் உயிர் நனைத்தாயடி
    பின்பு என்னை விட்டுவிலக நினைத்தாயடி
உன்னை பதி என நான் எண்ணி வந்தேன்
     என்னை விதியின் போக்கினில் விட்டு விட்டாய்
நீ இல்லாமல் நான் இல்லையடி
     உந்தன் சிந்தைக்கு ஏன் இது எட்டவில்லை
சொல்லடி நீ வந்து என் கண்ணின் முன்னே
      முடிந்ததடி எந்தன் விதி
இனி தொடறது எந்தன் சதி ...

புதன், 9 ஏப்ரல், 2014

நியாயங்கள்


காற்றில் உந்தன் தேன் குரல் கேட்டேன்
       கண்ணில் எந்தன் தாய் அன்பை பார்த்தேன்

என் மனதுக்குள் காதல் பூவை மலர செய்தாயடி
       என் இதழ்கள் சொல்ல துடித்தது நம் அன்பை

எல்லாம் அறிந்தும் என் பாசத்தை மறுத்தாய்யடி
        எதற்கு இந்த நியாயங்கள், எனக்கு மட்டும் காயங்கள்

என் அன்பு எபோழுதும் உனக்கு புரிய போவதில்லை
         புரியும் பொழுது நான் இருக்க போவதுமில்லை


அனுதாபம்


என்  நண்பன் கூறுகிறான் என்னவள்
     இன்னொருவனுடன் நிட்சயிகபட்டுவிட்டால் என்று
இதை விட எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்

அவள் முகபுத்தகத்தில் பதிந்த பதிப்பால்
     அனைவரிடமும் வாழ்த்துக்கள் பெற்றாள்
நான் பிறரின் அனுதாபம் பெற்றேன்

அந்த வெகுளி பெண்ணிற்கு தெரியவில்லை
     வாழ்த்து  மகிழ்ச்சியை பெருக்கும்
அனுதாபம் வாழ்க்கையை வெறுப்படைய செய்யும் என்று

என்னவளே நீ கேட்ட அனைத்தையும் வாங்கி கொடுத்தேன்
     இப்பொழுது இன்னொரு வாழ்க்கை வேண்டும் என்றாய்
அதையும் உனக்காக கொடுத்தேன் பெண்ணே

இது போதும் எனக்கு இது போதுமே
     நீ கேட்ட அனைத்தையும் கொடுத்துவிட்டேன் 

திங்கள், 7 ஏப்ரல், 2014

உந்தன் நினைவு :)


உந்தன் விழிகளால் என்னை திருடி சென்றாய் கண்ணே
     இதயகூட்டில் என்னை சிறயடைத்தாய் பெண்ணே

எந்தன் சித்தம் கலங்க வைத்தாய் கண்ணே
      நான் உந்தன் தோளில்  சாய்ந்திடும்போது பெண்ணே

எந்தன் இரத்தம் கொதிக்குதடி உன்னை நித்தம் நித்தம் நினைக்கையிலே
      எந்தன் பித்தம் கலையுமா பெண்ணே, அடி உந்தன் நினைப்பிலிருந்து

உந்தன் நெற்றி வகுடுகளில் எந்தன் பார்வை பதிய வைத்தாய்
       என்னை ஆழ புதைத்தாய்  உந்தன் கண்ண குழியினிலே

போதுமடி பெண்ணே, இந்த பிறவியடி கண்ணே 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

ஏமாற்றம்


ஏமாற்றம் மட்டுமே என்னை
       ஏமாற்றாமல் இருக்கிறது

நம்பினேன் சிலரின் வார்த்தைகளை
      அவை வெறும் வார்த்தையாகவே போனது

என்னவளே நீ மட்டும் என்னை விட்டு செல்லவில்லை
        எனது உணர்சிகளும் என்னை விட்டு விலகியது

என்னவளே நீ என்னிடம் வருவாய் என என் விழிகள்
         அடைந்த ஏமாற்றத்தை விட என் இதயம் அடைந்த
ஏமாற்றம் அதிகம் இதில் வலி அதிகம் பெண்ணே 
         

சனி, 5 ஏப்ரல், 2014

சுற்றம் செய்த குற்றம்


பார்த்து பழகிய நாட்கள் கொஞ்சமாக இருந்தாலும்
என்னை உனகேற்றவனாக மாற்றி விட்டு
 இன்று ஏன் என்னை விட்டு விட்டாய்

என் மனதில் காதல் எனும் கல்லை எறிந்தாய்
பாசம் எனும் அலையை அடக்கி சென்றாய்
அதன் வலி என்றும் மரயாதடி 

நினைவுகளோடு நடந்தது நமது நிச்சயதார்த்தம்
இன்று  நான் இல்லாமல் அதுவும் நடந்தடி

உன் தந்தையின் பாசத்துக்காக என் காதலை
மறந்து சென்றாயடி இது யார் செய்த குற்றம்

சூழ்நிலை கைதி ஆனாயடி  

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

இரவு....


இரவில் உன் மடியில் சாய்ந்து  கொண்டு
     விடியலுக்காக காத்திருப்பது ஒரு சுகம் என்றால்

அந்த இரவினில் உன் கை பிடித்து தொலைதூர
      நடைபயணம் செய்வது மற்றொரு சுகம்

இரவு வானில் நட்சத்திரம் மின்னுவதை போல
      நம் கனவுகளும் மின்னுமடி ஒரு நாள்

இமைகள் தூங்கிய போதும் என் இதயம் கேட்கும் மெல்லிசை
       அவளின் மெல்லிய புன்னகை

விடியல் நமக்காக சிகப்புகம்பளம் விரித்து காத்திருக்கும்
        ஆனால் நமக்கு போதுமடி இந்த அமைதியான இரவு

..........நான்  காத்திருப்பேன் என்றும் உனக்காக என் இனியவளே 

வியாழன், 3 ஏப்ரல், 2014

கண்ணீர் துளிகள் :'(


நான் எவ்வளவோ முயற்சி செய்தும்
உன்னை மறக்க முடியவில்லை

உன்னை நினைத்து விட்டால்  என் கண்கள் கலங்கும்
என் கண்ணீர் துளிகளுக்கு மட்டுமே தெரியும்
என் அன்பின் ஆழம்

என்னவளே என் கண்ணீருக்கு காரணம் கேட்காதே
பிறகு உன் கண்ணீருக்கு அதுவே காரணமாகிவிடும் 

புதன், 2 ஏப்ரல், 2014

பிரிவு (!_!)



என்ன பிழை செய்தேன் நான்,
 எனக்கு ஏன்மரணத்தை விட கொடிய
 "பிரிவு" எனும் தண்டனை கொடுத்து சென்றாய்

உன் பார்வையிலே சொன்னாய் ஆயிரம் அர்தங்கல்
அதன் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை
புரியும்பொழுது என் அருகில் நீ இல்லை

இந்த ஜென்மம் உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லடி பெண்ணே
நான் மீண்டும் மரணித்து பிறப்பேன் மீண்டும் உனக்காக

திங்கள், 31 மார்ச், 2014

உறவு

எங்கே எப்போ நான்  என்னை உன்னிடம் தொலைதேனோ தெரியவில்லை
உன்னை விட்டு போக எனக்கும் மனமில்லை
தேவை மட்டும் உன் உறவு என்று என் மனம் சொல்லுதடி
உறவு எனும் வட்டத்தில் நீ சிக்கிக்கொள்ள
யாரிடத்தில் சென்று நான் மெய்பிபேன் நீ என்னவள் என்று
உன் உறவுகளை பிரிக்க  நான் திட்டமிட்டு செய்த சதி அல்ல
அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு உனக்கும் காலம்  இல்லை
நம் வாழ்கையில் போராட கூட களம் இல்லையே....

ஞாயிறு, 30 மார்ச், 2014

நினைவுகள்


என் கண் முன்னே நீ நின்றாய்
உன்னை பார்த்ததும் நான் வாழ்வேனோ
இல்லைமண்ணோடு  வீழ்வேனோ
உந்தன்  நினைவுகளிள், காற்றோடு நான்  கரைந்து போவேனோ
அடி என் உயிரே, சொல் நீ உந்தன்  பதிலை...

உன்னோடு நான்

நீ என்னோடு இல்லை என்றாலும் 
       உன் நினைவு என்றும் என்னை விட்டு அழிவதில்லை 

உன் நினைவை வைத்து நான் உருவாக்கிய கற்பனை உலகம்
        அங்கு யாருக்கும் அனுமதி இல்லை 

அங்கு நீயும் நானும், நமக்காக  காத்திருந்த நம் வாழ்க்கை
           மகிழ்சிக்கு குறைவில்லை          

இது போதுமடி, வேறன்ன வேண்டும்  எனக்கு 
          உன்னோடு நான், என்றும் நம் நினைவிலேயே  வாழுவேன் ...

அவளின் பிரிவு


என்  நினைவில் இருந்து, என்றும் நீங்காத என் இனியவள் 
எனக்கு கொடுத்த பரிசு பிரிவு ....

என் உயிரைவிட பெரிதாய் நினைத்த அவள்,
 என்னை விட்டு பிரியும் போது தான் தெரிந்தது 
பிரிவின்  வலி ....


நான் இன்றி அவள் இல்லை, 
அவள் இன்றி அணுவும் இல்லை....